தமிழ்நாடு

கரோனா:வேதாரண்யத்தில் உப்பு ஏற்றும் பணி மார்ச்.31 வரை நிறுத்தம்

23rd Mar 2020 10:20 PM

ADVERTISEMENT

 

வேதாரண்யம்: கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து வெளியிடங்களுக்கு  உப்பு ஏற்றும் பணி மார்ச்.31 வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பபட்டுள்ளது.

இது குறித்து வேதாரண்யம் உப்பு உற்பத்தியாளர் மற்றும் உப்புத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான பி.வி.இராசேந்திரன் திங்கள்கிழமை விடுதுள்ள அறிக்கை:

தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்த நிலையில் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி செய்யயப்படுகிறது.

ADVERTISEMENT

இங்கிருந்து தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் உப்பு அனுப்பி வைப்பது வழக்கம்.

நாடுமுழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஏதுவாக மார்ச்.31 வரையில் உப்பு ஏற்றும் பணியை நிறுத்தி வைத்து, இயல்பு நிலை திரும்ப ஒத்துழைப்பது என  முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT