தமிழ்நாடு

புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு; மதுபானக் கடைகளை மூடவும் உத்தரவு

23rd Mar 2020 01:40 PM

ADVERTISEMENT


புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

அதே சமயம், புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் மதுபானக் கடைகளை மூடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31ம் தேதி வரை புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இரக்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதில் அலட்சியம் காட்டுவதால் ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

புதுச்சேரியில் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் செல்வதைத் தவிர்க்குமாறும், ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களை மூடவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை மீறி மக்கள் வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT