தமிழ்நாடு

காவேரிப்பட்டணம் அரசு தேர்வு மையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள்

23rd Mar 2020 12:15 PM

ADVERTISEMENT


காவேரிப்பட்டணம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த மையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை முன்னிட்டு பள்ளி வளாகம் முழுவதும் தூய்மை செய்யப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலரின் உத்தரவின்படி, கரோனா தடுப்பு மருந்து பள்ளி வளாகம் முழுவதும் தெளிக்கப்பட்டது. 

இன்று தேர்வு எழுத வந்த அனைத்து மாணவர்களும் சோப்பினால் கைகளை கழுவிய பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை ஒன்றியச் செயலர் பவுன்ராஜ் செய்திருந்தார்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT