தமிழ்நாடு

சித்தூரில் ஒருவருக்கு கரோனா அறிகுறி

23rd Mar 2020 03:44 PM

ADVERTISEMENT

 

ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒருவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து அவரின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள கொங்காரெட்டிபள்ளிக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு இளைஞர் கடந்த சில நாட்களுக்கு முன் வந்தார். அவரை வீட்டில் தனிமையில் இருக்குமாறு கையில் முத்திரையிட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். 

அவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுக் கவனிப்பிலிருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் திங்கட்கிழமை தென்பட்டதையடுத்து அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் திருப்பதி சிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அவரின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மாலை முடிவு வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT