தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி மற்றும் கவரப்பேட்டைத் தேர்வு மையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை

23rd Mar 2020 01:27 PM

ADVERTISEMENT

 

பிளஸ்-1 தேர்வு எழுத கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

கும்மிடிப்பூண்டி கேஎல்கே அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு, அரசு நிதியுதவியால் இயங்கும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 10 பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பிளஸ்1 தேர்வு எழுத வந்தனர்.

தேர்வை ஒட்டி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் கோபி உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் பள்ளி வளாகம், தேர்வு அறைகளில் கிருமி நாசினிகளைத் தெளித்தனர்.

ADVERTISEMENT

மேலும் தேர்வு மையத்திற்கு வந்த மாணவர்களுக்குக் கிருமி நாசினி வழங்கி கைகளைச் சுத்தம் செய்த பின்னரே தேர்வு அறைக்கு அனுப்பப்பட்டனர்.

அதே போல கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்பட்ட நிலையில் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த குழாய்களில் மாணவர்களும் தேர்வு மையத்தில் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் சோப்பால் கையை கழுவிய பின்னரே தேர்வு அறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், தேர்வு முடிந்த பிறகும் அனைவரும் கையை கழுவிய பின்னர் வெளியே செல்ல தலைமை ஆசிரியர் ஐயப்பன் உத்தரவிட்டார்.

அதே ஆரம்பாக்கம், எளாவூர், சுண்ணாம்பு குளம் போன்ற வெளிப்பகுதிகளிலிருந்து தேர்வெழுத வந்த மாணவர்கள் பேருந்துகள் இல்லாத நிலையில் பைக்குகள் மூலமும், வாடகை ஆட்டோ பிடித்தும் தேர்வு மையங்களுக்குச் சென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT