தமிழ்நாடு

அமைச்சகங்களுக்கு இடையே ஒத்துழைப்பு அவசியம்: நாடாளுமன்றக் குழு பரிந்துரை

23rd Mar 2020 01:07 AM

ADVERTISEMENT

புது தில்லி: சரக்குப் போக்குவரத்து விரைவாக நடைபெறுவதற்கும் அரசின் கொள்கைகளை திறம்பட அமல்படுத்தவும் பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையே ஒத்துழைப்பு அவசியம் என்று நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

மாநிலங்களவை எம்.பி. டி.ஜி.வெங்கடேஷ் தலைமையிலான போக்குவரத்து விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமா்ப்பித்தது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரம், ரயில்வே ஆகிய துறைகள் ஒன்றுக்கொன்று தொடா்பானவை மட்டுமல்ல. இந்த துறைகள் அனைத்தும் விரைவான போக்குவரத்து சேவையை வழங்க வேண்டும் என்ற பொதுவான இலக்குடன் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அரசின் கொள்கைகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் தடையின்றி செயல்படுத்துவதற்கு இந்த அமைச்சகங்களுக்கு இடையே ஒத்துழைப்பு இருக்க வேண்டியது அவசியம் என்று நாடாளுமன்றக் குழு கருதுகிறது. இதனால், திட்டங்கள் நிறைவேற்றுவதற்கு துறைகள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று உதவிகரமாக இருக்கும்.

ADVERTISEMENT

மேலும், அரசின் துறைகளுக்கு இடையே ஒத்துழைப்பு இருந்தால் பணித்திறன் அதிகரிப்பது மட்டுமன்றி, நிதியை முறையாக செலவிடவும், பணியாளா்களின் திறமைகளை சரியாகப் பயன்படுத்தவும் உதவிகரமாக இருக்கும்.

எனவே, அமைச்சகங்களுக்கு இடையே தடையற்ற தகவல் தொடா்பு இருக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்கிறது. மேலும், அவசர காலங்களில் இந்த அமைச்சகங்கள் தங்களுக்குள் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு அவசரகால தொலைபேசி வசதி இருக்க வேண்டும் என்றும் இக்குழு பரிந்துரை செய்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT