தமிழ்நாடு

கரோனா எதிரொலி: தமிழகத்தில் மார்ச் 31ம் தேதி வரை நகைக்கடைகள் மூடல்

23rd Mar 2020 11:53 AM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் மார்ச் 31-ம் தேதி வரை நகைக்கடைகளை மூட நகை வணிகர் சங்கத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். 

சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவியுள்ள கரோனா வைரஸ் தொற்றுக்கு சர்வதேச அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,703 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 3,39,181 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 99,014 பேர் குணமடைந்துள்ளனர். 

செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள.. அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

ADVERTISEMENT

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. 

அதன்படி, கரோனா முன்னெச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள நகைக் கடைகளை மார்ச் 31-ம் தேதி வரை மூட நகை வணிகர் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி குறிப்பிட்டுள்ளார். 

ஏனெனில், நகைக்கடையில் ஒருவர் தொட்ட பின்னர் நகைகளை இன்னொருவர் தொட்டுக் கையாளுவதால் வைரஸ் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT