தமிழ்நாடு

மத்திய அரசின் கல்லூரிகள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம்

DIN

சென்னை: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரி பேராசிரியர்கள்,  சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது.

சீனாவின் வூஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸôல் உலகம் முழுவதும் இதுவரை 9000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸôல் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸôல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இதையடுத்து கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுக்க பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இது தவிர, பல்கலைக்கழகத் தேர்வுகளையும் யுஜிசி ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடெங்கும் கல்வி நிறுவனங்களை மூடவும், அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைக்கவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை  உத்தரவிட்டது. 

இந்நிலையில், நாடு முழுவதும் முழுதும் மத்திய அரசின் கீழ் வரும் கல்லூரி, சிபிஎஸ்சி பள்ளிகளின் ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என மத்திய அரசு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "மத்திய அரசின் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டாலும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT