மக்கள் சுய ஊரடங்கு இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் கிருஷ்ணகிரியில் காலை ஏழு மணிக்கு முன்பு அசைவ உணவு விரும்பிகள், இறைச்சிகளை வாங்க ஆர்வத்துடன் கடைகளுக்கு வந்திருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் கறிக்கோழி கிலோ 20 என்ற விலையில் விற்பனை செய்த நிலையில் இன்று ரூ நாற்பது என்ற விலையில் விற்பனை ஆனது. பொதுவாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
மக்களின் நடமாட்டம் குறைவாக இருந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.