தமிழ்நாடு

வெறிச்சோடியது வேலூர் சாலைகள் 

22nd Mar 2020 11:55 AM

ADVERTISEMENT

சுய ஊரடங்கு காரணமாக வேலூரில்கடைகள் முழுமையாக அடைக் கப்பட்டன.   

பொதுமக்கள் விட்டிற்குள் முடங்கியதால் முக்கியச் சாலைகள் வெறிச்சோடின. இந்தியாவில் கரோனா  வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பிரதமர் மோடி சுய ஊரடங்குக்கு அழைப்பு விடுத்திருந்தார்.  அதன்படி இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள் கரோனா  வைரஸில் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்கான முயற்சியின்  சோதனையாக இது அமையும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.  

இந்த அழைப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர்,  அமைப்பினர்,  வணிகர்கள் பல்வேறு சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து வேலூரில் இன்று காலை  முதல் மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடித்தனர்.  இன்று அரசு, தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் , 500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் முற்றிலும் ஓடவில்லை. காய்கறி கடைகள் மருந்து கடைகள்,  பெரிய சந்தைகள் போன்றவை அடைக்கப்பட்டு இருந்தது. 

மாநகர் பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணாசாலை, காட்பாடி சாலை, ஆற்காடு சாலை உட்பட அனைத்து பகுதியில் உள்ள ஹோட்டல்கள் ,கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.  இந்தப் பகுதியில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. காலையில் ஒரு சில டீ கடைகள் மட்டும் திறந்து இருந்தன.  அதே போன்று ஒருசில இறைச்சிக் கடைகளும் திறந்து இருத்தன.  ஆனால் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. 

ADVERTISEMENT

7 மணிக்கு பிறகு இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்டத்தில் மதுக்கடைகளும், பார்களும் அடைக்கப்பட்டுள்ளன.  பெட்ரோல் நிலையங்கள் வழக்கம் போல் செயல்பட்டன ஆனால் குறைந்த அளவே ஊழியர்கள் பணியில் இருந்தனர்.  மருந்துக்கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. முக்கியமான ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

மாவட்டத்தில் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை மக்கள் முழுமையாக கடைப்பிடித்தனர்.  வீட்டுக்குள்ளிருந்து தொலைக்காட்சி பார்ப்பது செல்லிடபேசியில்  விளையாடுவது,  இணைய தளத்தை பயன்படுத்துவது, புத்தகங்களைப் படிப்பது என நேரத்தை செலவிட்டனர்.  இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT