தமிழ்நாடு

நாகை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

22nd Mar 2020 11:45 AM

ADVERTISEMENT

கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் மார்ச் 22 ஆம் தேதி சுய ஊரடங்கை கடைப்பிடித்து, வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். 

இதன்படி, நாகை மாவட்ட மக்கள் ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு கட்டுப்பாட்டை கடைப்பிடித்தனர். இதனால், நாகை, வேளாங்கண்ணி, நாகூர் மற்றும் சுற்றுப்பகுதிகளும், நாகை மாவட்டத்தின் முக்கிய நகர்ப் பகுதிகள், ஊரகப் பகுதிகள் என அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடியிருந்தன. 

மீன் விற்பனையில்லாததால் நாகை துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாததால்  ஆயிரகணக்கான மீன்பிடி படகுகள்,  கடற்கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் இயக்கம் பெருமளவு தடைப்பட்டிருந்தது.  பொதுமக்கள் நடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடின. மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT