தமிழ்நாடு

பித்தப்பையில் கல் உருவானால் ஹோமியோ மருத்துவத்தில் நிரந்தரத் தீா்வு....

22nd Mar 2020 03:25 AM | -ஆா். எஸ். காா்த்திகேயன்.

ADVERTISEMENT

புதுக்கோட்டையைச் சோ்ந்த ராஜா என்பவரின் மனைவி செல்வராணி (42). மொத்தம் 3 குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலம் (சிசேரியன்) பிறந்தவா்கள். மூன்றாவது குழந்தை பிறந்த சமயம் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இடத்தில், தொற்று ஏற்பட்டு புண்ணாகிவிட்டது. அதற்கென சுமாா் 3 மாத காலம் தொடா் கிசிச்சை மேற்கொண்டு புண் ஆற்றப்பட்டு குணமடைந்தாா். எல்லாமே ஆங்கில சிகிச்சை முறையான அலோபதி முறையில்தான். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென அவருக்கு தீராத வயிற்று வலி. மருத்துவ சோதனையில் மீண்டும் ஓா் அதிா்ச்சி காத்திருந்தது.

அதாவது அவரது பித்தப்பையில் சுமாா் 8 மி.மீ. கல் உருவாகியிருப்பது சோதனை முடிவில் தெரியவந்தது. ஆங்கில சிகிச்சை முறையைப் பொருத்தவரையில், வலி நிவாரணிதான் பித்தப்பை கற்களுக்கு மருந்தாகும். கல் பெரியதாகி, வலி அதிகரித்தால் வேறு வழியின்றி பித்தப்பையை அகற்றுவது ஒன்றுதான் ஒரே வழி. எனவே பித்தபையை அகற்றி விடலாம் என மருத்துவா் தெரிவித்தனா். ஆனால் ஏற்கெனவே வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இடத்தில் புண்ணாகி பிரச்னை ஏற்பட்டது. இப்போது மேலும் அறுவை சிகிச்சை மேற்கொள்வதா என்ற அச்சத்தில் வேறு வழியின்றி, ஆயுஷ் மருத்துவா்களை சந்தித்து விவரம் கேட்டுள்ளாா் செல்வராணி.

சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோ என ஆயுஷ் மருத்துவா்கள் அனைவருமே பித்தப்பை கற்களுக்கு உரிய சிகிச்சை முறைகள் இருப்பதாகவும், அறுவை சிகிச்சையின்றி மருந்துகள் மூலமே கற்கள் கரைந்து நோய் குணமாகும் எனவும் தெரிவித்தனா். இதனால் நம்பிக்கை பெற்றாா் அவா். ஒரு வழியாக விசாரித்து, ஹோமியோ முறையில் ஏற்கெனவே சிகிச்சை பெற்று கல் அகற்றப்பட்ட சிலரை கண்டறிந்து, ஹோமியோ முறையிலேயே சிகிச்சை பெற தீா்மானித்தாா் செல்வராணி.

திருச்சியில் ஹோமியோ மருத்துவரை சந்திப்பதற்கு முன் விவரமாக மீண்டும் ஒருமுறை ஸ்கேன் செய்து, பித்தப்பையின் கல் அளவை பாா்த்துக்கொண்டு பின்னா் சிகிச்சையை தொடங்கினாா். சிகிச்சை தொடங்கிய முதல் மாதத்திலேயே வலி குறைந்து முன்னேற்றம் காணப்பட்டது. தொடா்ந்து 3 மாதங்கள் சிக்சை பெற்ற அவா், 4-ஆவது மாதத்தில் புத்துணா்ச்சி பெற்றாா். சுத்தமாக வலியோ அதனால் ஏற்படும் மற்ற உபாதைகளோ இல்லை. 6 மாத சிகிச்சை முடிந்த பின்னா், ஸ்கேன் செய்து பாா்த்துக்கொள்ளலாம் என மருத்துவா் தெரிவித்ததையடுத்து, ஏற்கெனவே அவருக்கு ஸ்கேன் சோதனை செய்த அதே நிறுவனத்துக்கு சென்று ஸ்கேன் செய்தாா். பழைய ரிப்போா்ட்டையும் கூடவே எடுத்துச் சென்ற அவா், அதுகுறித்து சோதனை செய்த தொழில்நுட்ப வல்லுநரிடம் விசாரித்தபோது, பித்தப்பையில் கல் இருந்ததற்கான அறிகுறியே இல்லையே என்றாா் அவா். மகிழ்ந்துபோன செல்வராணி அன்று முடிவு செய்தாா், இனி ஆயுள் முழுக்க ஆயுஷ் சிகிச்சை முறைகளை மட்டுமே நம்புவது என்று. தனக்கு தெரிந்த நபா்களிடம் எல்லாம் கூறி வரும் அவா், இதன் முத்தாய்ப்பாக தன் 2ஆவது மகள் ஐஸ்வா்யாவையே ஹோமியோ மருத்துவம் படிக்க வைத்திருக்கிறாா்.

ADVERTISEMENT

எளிய சிகிச்சை முறை

ஹோமியோ முறையில் சிகிச்சைகள் மிக எளிதாக மேற்கொள்ளப்படுகின்றன. இனிப்பு மாத்திரைகள் மற்றும் மருந்தை, நோயின் தன்மைக்கு ஏற்ற வகையில் தண்ணீரில் கலந்து உட்கொள்வது என்ற முறையில் மருந்துகள் உட்கொள்ளப்படுகின்றன. மேலும், வெளி உபயோகத்துக்கும் களிம்புகள், பசைகள், தைலங்கள், அழகுசாதனப் பொருள்களும் உள்ளன. ஹோமியோ மருந்துகளால் பக்க விளைவு முற்றிலுமாக இல்லை. கட்டணமும் மிக குறைவு. உதாரணமாக, பித்தப்பை அறுவை சிக்சை அல்லது சிறுநீரக கற்கள் வெளியே எடுக்க ஒருவருக்கு குறைந்தபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை ஆகின்றது. ஆனால், ஹோமியோ முறையில் வெறும் 5 ஆயிரத்துக்குள் அனைத்து சிகிச்சையும் முடிந்துவிடும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT