தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

22nd Mar 2020 01:32 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் நாளை(திங்கட்கிழமை) காலை 5 மணி வரை மக்கள் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில்  கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 332  ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று தகவல் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

இதற்கிடையே, பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு முழுவதும் 'மக்கள் ஊரடங்கு' பின்பற்றப்படுகிறது. இதனால் அனைத்து போக்குவரத்து சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்நிலையில், இந்த ஊரடங்கு தமிழகத்தில் நாளை(திங்கட்கிழமை) காலை 5 மணி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதே நேரத்தில் அத்தியாவசியப் பணிகளைத் தொடர தடையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT