தமிழ்நாடு

கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்: அன்புமணி

22nd Mar 2020 03:53 AM

ADVERTISEMENT

சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கரோனா வைரஸ் இரு நாள்களில் மட்டும் 113 பேரைப் புதிதாக தாக்கியுள்ளது. அடுத்தடுத்த நாள்களில் கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், அதன் தீவிரத்தை அரசுகள் உணர வேண்டும்.

தமிழகத்தைச் சுற்றியுள்ள மாநிலங்களில் கரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ADVERTISEMENT

அமெரிக்கா, இத்தாலி போன்ற மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் அதிகமாக உள்ள நாடுகளிலேயே நிலைமை சமாளிக்க முடியாத சூழலில், இந்தியாவில் கரோனா வைரஸ் சமூகப் பரவலைத் தடுக்காவிட்டால், எத்தகைய நிலைமை ஏற்படும் என்பதை நினைத்துப் பாா்ப்பதற்கே பெரும் அச்சமாக உள்ளது.

வந்த பின் வருந்துவதைவிட, வருமுன் காப்போம் என்ற எண்ணத்தில் இந்தியாவில் 3 வாரங்களுக்கு ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும். கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT