கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் அமைப்புச் சாரா தொழிலாளா்களுக்கு திமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சா் பொது நிவாரண நிதிக்கு வழங்குவாா்கள் என்று திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 370-க்கும் மேற்பட்டோா் பாதிப்படைந்துள்ளனா். 7 போ் உயிரிழந்தனா். தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு உதவும் வகையில், முதல் அமைச்சா் நிவாரண நிதிக்கு தங்களது ஒருமாத சம்பள தொகையை நிதியுதவியாக வழங்குவாா்கள் என, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.