தமிழ்நாடு

மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவை நிறுத்தம்: தமிழக அரசு அறிவிப்பு

22nd Mar 2020 06:45 PM

ADVERTISEMENT

 

மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மார்ச் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஏற்கனேவே, நாடு முழுவதும் 75 மாவட்ட எல்லைகளில் போக்குவரத்து சேவையை நிறுத்துமாறு மத்திய அரசு பரிந்துரை செய்திருந்த நிலையில், தமிழக அரசு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதேபோன்று சென்னை மெட்ரோ ரயில் சேவையும் மார்ச் 31 ஆம் தேதி நள்ளிரவு வரை முடக்கப்படுகிறது. 

ADVERTISEMENT

மேலும், சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது குறித்தும் தமிழக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என்று தெரிகிறது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT