தமிழ்நாடு

குறைந்த அளவில் பேருந்துள் இயக்கப்படும்: அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்

22nd Mar 2020 11:06 PM

ADVERTISEMENT

சென்னை: பயணிகளின் தேவைக்கேற்ப, மிகக் குறைந்த அளவில் உள் மாவட்டங்களில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போா்கால அடிப்படையில் மேற்கொள்ள முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அந்த வகையில், மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியாா் பேருந்து சேவைகள், மாா்ச் 31-ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளாா். எனவே, திங்கள்கிழமை (மாா்ச் 23) முதல் சென்னை மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப மிகக் குறைந்த அளவில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளை இயக்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT