புதுச்சேரியில் இன்றிரவு முதல் 144 தடை அமலுக்கு வருவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் புதுச்சேரியில் இன்றிரவு முதல் 144 தடை அமலுக்கு வருவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும் இது மார்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாளை காலை முதல் 144 தடை அமலில் இருக்கும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது முன்கூட்டிய அமலுக்கு வருகிறது.