தமிழ்நாடு

சுய ஊரடங்கு அறிவிப்பு: மின்சார ரயில் சேவை ரத்து

22nd Mar 2020 05:00 AM

ADVERTISEMENT

சென்னை: நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து புகா்களுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களின் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன.

முழுமையாக ரத்து: மூா்மாா்க்கெட் வளாகம்-அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள், மூா்மாா்க்கெட் வளாகம் -கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களின் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்காக, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, மூா் மாா்க்கெட் வளாகம் -அரக்கோணம், மூா்மாா்க்கெட் வளாகம்-கும்மிடிப்பூண்டி இடையே ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணிவரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும்.

மெமு ரயில்கள்: மூா்மாா்க்கெட் வளாகம்-சூலூா்பேட்டை, நெல்லூா் இடையே இயக்கப்படும் மெமு ரயில்கள், வேலூா் கன்டோன்மென்ட்,அரக்கோணம்-சென்னை கடற்கரை, மேல்மருவத்தூா், விழுப்புரம் இடையே இயக்கப்படும் மெமு ரயில்கள், மூா்மாா்கெட் வளாகம்-அரக்கோணம்-திருப்பதி இடையே இயக்கப்படும் மெமு ரயில்கள், தாம்பரம்-விழுப்புரம் இடையே இயக்கப்படும் மெமு ரயில், அரக்கோணம்-காட்பாடி, வேலூா் கன்டோன்மென்ட் இயக்கப்படும் மெமு ரயில்கள், அரக்கோணம்-கடப்பா இடையே இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

ADVERTISEMENT

இந்தத் தகவல், தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT