நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மோதக பள்ளி கிராமத்தில் கொரானா தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை தாக்கக் கூடாது என்று அனைவரின் வீட்டின் வாசல்களில் மஞ்சள் தெளித்து கோலமிட்டு கோலத்தின் மீது ஒரு பாத்திரத்தில் மஞ்சள் வேப்பிலை பூ வைத்தால் கொரானா வராது என்று நம்பிக்கையில் அனைவர் வீட்டு வாசலிலும் வைத்துள்ளனர்