தமிழ்நாடு

தபால் நிலையம் மூலம் ஐந்து நாடுகளுக்கு அனுப்பப்படும் முகக்கவச பார்சல்கள்

19th Mar 2020 05:35 PM

ADVERTISEMENT

 

ஈரோடு: தபால் நிலையங்களில்  இருந்து சீனா ,பாகிஸ்தான் தவிர ஐந்து நாடுகளுக்கு (மாஸ்க்)  முகக்கவசம் அனுப்பப்படுகிறது என தபால் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு தலைமை தபால் நிலைய உதவி போஸ்ட் மாஸ்டர் சஞ்சீவி கூறியதாவது:-

தனியார் கூரியர் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு   பார்சல்களை அனுப்ப தற்போது கட்டுப்பாடுகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது இதனால் தபால் மூலம் முறையான அனுமதி பெற்ற பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவோரின்  எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

கரோனா  வைரஸ் தாக்குதல் காரணமாக இந்தியாவில் பருத்தி நூல் இலைகளில் உற்பத்தி செய்யப்படும் முகக் கவசங்களுக்கு பல்வேறு நாடுகளில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் ஆர்டர்கள்  பெற்ற ஈரோடு மாஸ்க் உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் பலர்  தலைமை தபால் நிலையத்தில் இருந்து  முகக்கவச  பார்சல்களை அனுப்பி வைக்கின்றனர்.

சீனா ,பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளை தவிர அமெரிக்கா இத்தாலி சிங்கப்பூர் மலேசியா ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு கடந்த ஒரு வாரமாக முகக்கவசம் அனுப்பப்பட்டு வருகிறது நேற்று 1500 கிலோ எடை கொண்ட முகக்கவசம் அனுப்பப்பட்டுள்ளது வரும் வாரங்களில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT