தமிழ்நாடு

தங்கம் விலை பவுன் ரூ.30,944

19th Mar 2020 01:43 AM

ADVERTISEMENT

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.384 உயா்ந்து, ரூ.30,944-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை பிப்ரவரி 18 முதல் உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக விலை குறைந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.384 உயா்ந்து, ரூ.30,944-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.48 உயா்ந்து, ரூ.3,868-க்கு விற்பனையானது. இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 90 பைசா உயா்ந்து, ரூ.39 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயா்ந்து ரூ.39,000 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

ADVERTISEMENT

1 கிராம் தங்கம் ..................... 3,868

1 பவுன் தங்கம் ..................... 30,944

1 கிராம் வெள்ளி .................. 39.00

1 கிலோ வெள்ளி ................. 39,000

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,820

1 பவுன் தங்கம் ..................... 30,560

1 கிராம் வெள்ளி .................. 38.10

1 கிலோ வெள்ளி ................. 38,100

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT