தமிழ்நாடு

கரோனா குறித்து அச்சப்படத் தேவையில்லை: முதல்வர் பழனிசாமி

19th Mar 2020 03:05 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரிவர செய்யப்பட்டு வருவதால், அச்சப்படத் தேவையில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றப் பேரவையில் இன்று, தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் கரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து அளித்த விளக்கத்தில்..

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பேசுகின்ற போது, சிறுதொழிலைப் பற்றிச் சொன்னார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் சிறுதொழில்கள் எதுவும் மூடப்படவில்லை. எனவே, அச்சம் தேவையில்லை. சிறுதொழில்கள் எல்லாம் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. அதில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள் எல்லாம் பணிபுரிந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அதற்கு முன்னெச்சரிக்கையாக தொழிலாளர் நலத் துறை செயலாளரும் தகுந்த எச்சரிக்கையை கொடுத்திருக்கின்றார்கள். அவர்கள் எல்லாம் எப்படி எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதையெல்லாம் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். 

அதேபோல, தொழில் துறை செயலாளர் அவர்களும் மிகப் பெரிய தொழிலில் இருக்கின்ற பணியாளர்களை எப்படியெல்லாம் பாதுகாக்க வேண்டும், எப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றார்கள். ஆகவே, எந்தவித அச்சமும் படத்தேவையில்லை. இன்றைக்கு சிறுதொழிலானாலும் சரி, பெரும் தொழிலானாலும் சரி, பணியாளர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தங்கள் வாயிலாக எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

எதிர்க்கட்சித் தலைவர் பேசுகையில், பல நாடுகளை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். இத்தாலி நாட்டில் வெகுவாக பரவியிருக்கிறது. எனவே, இது மேலும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். நம்முடைய மாநிலத்தைப் பொறுத்தவரைக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் முழுமூச்சுடன் எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே, இன்றைக்கு வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் மூலமாகத் தான் வருகிறதேயொழிய, நம் மாநிலத்தில் இருப்பவர்கள் மூலமாக வரவில்லை. ஆகவே, வெளிநாட்டிலிருந்து வருகின்றவர்களை பரிசோதனை செய்து, அவர்களுக்கு கரோனா அறிகுறி ஏதாவது இருந்தால், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்பதை  தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, அச்சப்படத் தேவையில்லை என்பதையும் எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT