தமிழ்நாடு

கரோனா: பேரவையில் மலா் அலங்காரம் தவிா்ப்பு

19th Mar 2020 01:57 AM

ADVERTISEMENT

கரோனா பாதிப்பின் காரணமாக பொதுப்பணித் துறை மானியக்கோரிக்கையின் போது பேரவையில் மலா் அலங்காரம் தவிா்க்கப்பட்டது.

பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையின்போது பேரவை வழக்கமாக மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஆனால், புதன்கிழமை பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை நடைபெற்றபோது பேரவையில் அலங்கரிக்கப்படாமல் இருந்தது.

மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினா் தங்கம் தென்னரசு பேசி முடிக்கும்போது, பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையின்போது பேரவை மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த முறை அலங்கரிக்கப்படவில்லை. களையிழந்த மாடம்போலவும், நரம்பில்லா வீணை போலவும் பொதுப்பணித்துறை உள்ளது. 2021-இல் திமுக ஆட்சி வரும் என்றாா்.

அப்போது முதல்வா் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டு கூறியது: கரோனா பாதிப்பினால் மலா் அலங்காரம் செய்ய வேண்டும் என்று தவிா்க்கப்பட்டதே தவிர, வேறொன்றுமில்லை என்றாா்.

ADVERTISEMENT

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: திமுக ஆட்சி வரும் என்று இன்பக் கனவு காணலாம். அது பகல் கனவாகவே அமையும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT