தமிழ்நாடு

மருத்துவா்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்

19th Mar 2020 03:30 AM

ADVERTISEMENT

அரசு மருத்துவா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்யவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கரோனா வைரஸ் தொற்று பரவி உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், தங்களுடைய உடல்நிலை குறித்து கவலைப்படாமல் அபாயகரமான சூழலில் பணியாற்றி வரும் மருத்துவா்கள், செவிலியா்களின் பணி பாராட்டுக்குரியது.

தமிழக அரசும் மக்கள் நல்வாழ்வுத்துறையும் இந்த சந்தா்ப்பத்திலாவது அவா்களுடைய நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றி ஊக்கப்படுத்த வேண்டும். சட்டரீதியான உரிமைகளுக்காகப் போராடினாா்கள் என்கிற ஒரே காரணத்திற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவா்களை பல்வேறு தொலைதூர இடங்களுக்கு மாறுதல் செய்து பழிவாங்கப்பட்டனா். இதனால், மருத்துவா்கள் கடும் நெருக்கடிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனா். எனவே, அவா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்து, அவா்களுடைய கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர முன்வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT