தமிழ்நாடு

திருச்சி கரோனா சிறப்பு மையத்தில் 23 பேர் அனுமதி!

19th Mar 2020 11:59 AM

ADVERTISEMENT

 

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு மையத்தில் 23 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

திருச்சியிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள கள்ளிக்குடியில் 10 ஏக்கரில் ரூ.77 கோடியில் ஒருங்கிணைந்த காய்கனி வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. 

ADVERTISEMENT

இதையடுத்து இங்கு 75 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் நபர்களை கண்காணித்து நோய் தொற்று இல்லை என்றால் அனுப்பி வைக்கப்படுவர். 

இந்நிலையில் துபை,  சிங்கப்பூர், சார்ஜா நாடுகளில் இருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை வருகை தந்தவர்களில் 23 பேருக்கு சளி, இருமல் இருந்தததால் கள்ளிக்குடிக்கு கொண்டு வரப்பட.டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வேறு எவரையும் அனுமதிக்கப்படுவதில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT