சட்டப் பேரவையில் வியாழக்கிழமை (மாா்ச் 19) கேள்வி நேரத்துக்குப் பிறகு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை தொடா்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்த விவாதங்களுக்கு அமைச்சா்கள் செல்லூா் கே.ராஜு, ஆா்.காமராஜ் ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனா்.