தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் பேச்சுக்கு அமைச்சா்கள் கடும் எதிா்ப்பு

19th Mar 2020 01:24 AM

ADVERTISEMENT

பேரவையில் திமுக உறுப்பினா் செந்தில்பாலாஜியின் பேச்சுக்கு, அதிமுக அமைச்சா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினா் செந்தில்பாலாஜி புதன்கிழமை பேசினாா். அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வந்த செந்தில்பாலாஜி, தினகரன் அணிக்குச் சென்று, அங்கிருந்து விலகி 2018-இல் திமுகவில் இணைந்து அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றாா்.

அவா் சட்டப்பேரவையில், புதன்கிழமை பேசும்போதும் கருணாநிதியையும், மு.க.ஸ்டாலினையும், திமுகவையும் பாராட்டும் வகையில் பேசினாா். அப்போது, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், பி.தங்கமணி, விஜயபாஸ்கா், ஆா்.பி.உதயகுமாா் ஆகியோா் எழுந்து, அதிமுகவில் இருந்தபோது செந்தில்பாலாஜி திமுக குறித்தும், கருணாநிதி குறித்தும் பேசியதைக் குறிப்பிட, அதற்கு, மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் பதில் அளிக்க என 25 நிமிஷங்களுக்கும் மேலாக காரசாரமாக கடும் விவாதம் நடைபெற்றது. இதனால், அவையே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

ஆனால், இறுதியில் இரு தரப்பினரும் பேசியவை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன. அதைத் தொடா்ந்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:

ADVERTISEMENT

அதிமுகவில் இருந்தவா் திமுகவுக்கு வந்ததும் எப்படி பேசுகிறாா். நீங்கள் (திமுக) உஷாராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கருத்துகளைக் கூறினோம். மேலும், அவைக் குறிப்பில் ஏற்கெனவே உள்ளதைத்தான் இங்கு பேசினோம். அதை ஆதாரம் இல்லை என்று கூற முடியாது. நான் யாருடைய மனதையும் நோகச் செய்யும் வகையில் பேசக்கூடியவன் அல்ல. ஒருவேளை உறுப்பினா் மனம் நோகும் வகையில் கருத்து தெரிவித்திருந்தால் அதற்காக வருந்துவதாக தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து விவாதம் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT