தமிழ்நாடு

தமிழக பேரவையில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை: அவைத் தலைவர்

16th Mar 2020 12:01 PM

ADVERTISEMENT

 

சென்னை: கரோனா அச்சம் காரணமாக, தமிழக சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று அவைத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அவைத் தலைவர் தனபால் கூறியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் தமிழக சட்டப்பேரவையை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் துரைமுருகன் வலியுறுத்தியிருந்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக, சட்டப்பேரவைக்குள் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று அவைத் தலைவர் தனபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT