தமிழ்நாடு

எஸ்.ஐ. எழுத்து தேர்வு முடிவு வெளியீடு

16th Mar 2020 10:15 PM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழக காவல்துறை காவல் உதவி ஆய்வாளர் எழுத்து தேர்வுக்கான முடிவு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

இது குறித்த விவரம்:

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 969 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் வகையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

ADVERTISEMENT

இதில் காவல் பணியில் இருந்துக் கொண்டு இத் தேர்வை எழுதுவதற்கு 17,561 பேரும், பொதுப் பிரிவில்1,42,448 பேரும் எழுத்து தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவர்களுக்கு மாநிலம் முழுவதும் 32 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 12,13ஆம் தேதிகளில் தேர்வு நடைபெற்றது.

இதில் எழுத்துத் தேர்வு பெற்றவர்களின் விவரங்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளரப் தேர்வுக் குழுமத்தின் www.tnusrbonline.org  என்ற இணையத்தளத்தின் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளமா என்பதை இந்த இணையத்தளத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தக் கட்ட தேர்வான, உடற்கூறு அளத்தல்,உடற்தகுதி தேர்வு, உடல்திறன் போட்டி, அசல் சான்றிதழ் சரி பார்த்தல் ஆகியவை நடைபெறும். இதற்கான அழைப்புக் கடிதமும், இந்த இணையத்தளத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள், இணையத்தளத்தில் இருந்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   

ADVERTISEMENT
ADVERTISEMENT