தமிழ்நாடு

கும்பகோணத்தில் எண்ணெய் கடைகள் அடைப்பு

16th Mar 2020 04:52 PM

ADVERTISEMENT

 

கும்பகோணத்தில் வியாபாரி  கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து எண்ணெய் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கும்பகோணம் மேலக்காவேரி யைச் சேர்ந்தவர் ராமநாதன் (63). இவர் சண்முகம் தெருவில் சமையல் எண்ணெய் மொத்த வியாபாரம் செய்து வந்தார்.

வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு ராமநாதன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மேலும் வீட்டிலிருந்த நகைகள், பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

இச்சம்பவத்தைக் கண்டித்து கும்பகோணத்தில் எண்ணெய் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதில் சுமார் 140 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT