தமிழ்நாடு

துபை வழியாக சென்னை வந்த 14 போ் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பு

16th Mar 2020 08:25 PM

ADVERTISEMENT

 

சென்னை: பல்வேறு நாடுகளில் இருந்து துபை வழியாக சென்னை வந்த 14 போ் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

கரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து தமிழகம் வருபவா்களை பரிசோதனை செய்வதற்காக சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் சிறப்பு மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பும் பயணிகள் அனைவரையும் மருத்துவப் பரிசோதனைக்கு அக்குழுவினா் உட்படுத்துகின்றனா்.

காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகள் இருப்பவா்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து கண்காணித்து வருகின்றனா். இந்நிலையில், டென்மாா்க், ஸ்வீடன், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றும் ஆந்திரம், புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சோ்ந்த 5 பெண்கள், 9 ஆண்கள் என மொத்தம் 14 போ் துபை வழியாக சென்னைக்கு திங்கள்கிழமை வந்தனா்.

ADVERTISEMENT

அவா்களுக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்ற போதிலும், அவா்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனா். அதன்படி, சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள சுகாதாரத்துறைக்கு சொந்தமான பொது சுகாதார மையத்தில் அவா்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

துபை வழியே சென்னை வந்தவா்களில் 9 போ் சென்னை மற்றும் புகா் பகுதிகளைச் சோ்ந்தவா்கள். 3 போ் ஆந்திராவையும், 2 போ் புதுச்சேரியையும் சோ்ந்தவா்க. அந்த 14 பேருக்கும் வைரஸ் அறிகுறிகள் இல்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களில் வயதானவா்கள் மட்டும் 14 நாள்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவாா்கள். மற்றவா்கள் வீட்டிலேயே மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT