தமிழ்நாடு

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: பிச்சாவரத்தில் படகு சவாரி நிறுத்தம்

16th Mar 2020 07:35 PM

ADVERTISEMENT

 

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் மாங்குரோவ் காடுகள் அடங்கிய சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு சவாரி மார்ச் 31-ம் தேதி வரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் உத்தரவின் பேரில்,கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக மா்ர்ச் 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கடலூர் மாவட்டம் சிதம்ரம் அருகே தமிழ்நாடு சுற்றுலாக்கழகம் சார்பில் நடத்தப்படும் பிச்சாவரம் படகுக்குழாமில், படகுசவாரி நிறுத்தி வைக்கப்படுகிறது என சிதம்பரம் சுற்றுலா அலுவலர் க.சின்னசாமி பத்திரிகை குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT