தமிழ்நாடு

கரோனா பாதிப்பு அச்சத்தில் கேரளத்திலிருந்து திரும்பிய கூலித் தொழிலாளி

16th Mar 2020 03:13 PM

ADVERTISEMENT

 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் கரோனா பாதிப்பு அச்சத்தில் கேரளத்திலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அடுத்துள்ள வி உச்சம் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன்(35). இவர் கூலி வேலைக்காகக் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் உடல்நிலை பாதிப்பு காரணமாக திங்கள்கிழமை சொந்த ஊருக்குத் திரும்பி உள்ளார்.

காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தால் அதிர்ச்சியடைந்த சுந்தரபாண்டியன் தனக்கு வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தில் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்துள்ளார்.

ADVERTISEMENT

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவனைக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT