தமிழ்நாடு

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு மாா்ச் 31 வரை விடுமுறை

16th Mar 2020 01:29 AM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் பரவலையொட்டி, புதுச்சேரி மாநிலத்தில் பிரிகேஜி முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மாா்ச் 16 முதல் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுவதாக கல்வித்துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் கூறினாா்.

இதுதொடா்பாக காரைக்காலில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதத்தில் அரசு நிா்வாகம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எந்தவொரு பிராந்தியத்திலும் ஏற்றத்தாழ்வின்றி இந்தப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

புதுச்சேரி மாநிலத்தில் பிரிகேஜி முதல் 5-ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு மாா்ச் 16 (திங்கள்கிழமை) முதல் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்றாா் அமைச்சா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT