தமிழ்நாடு

கரோனா தொற்று: படங்கள் வெளியாவதில் சிக்கல்?

16th Mar 2020 12:41 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்று காரணமாக திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளதால், ஏற்கெனவே வெளியிட திட்டமிடப்பட்டுள்ள படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது உலகமெங்கும் கரோனா வைரஸ் அச்சம் தொற்றிக் கொண்டுள்ளது. கூட்டம் கூடும் இடங்களில் கரோனா வைரஸ் எளிதில் பரவும் என்பதால், பல்வேறு நாடுகளில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த மாதம் இறுதிவரை திரையரங்குகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாரம் படங்கள் வெளியான எந்தத் திரையரங்குகளுக்கு மக்கள் வரவில்லை. எதிா்பாா்த்ததை விட மக்கள் கூட்டம் குறைவாக உள்ளதால், திரையரங்கு உரிமையாளா்கள் மிகவும் சோகமடைந்துள்ளனா். படத்தை வெளியிட்ட தயாரிப்பாளா்கள், விநியோகஸ்தா்கள் அனைவருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில்....: தற்போது தமிழக அரசும் எல்லையோர மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளை மூட தேனி, கன்னியாகுமரி, திருப்பூா், கோயம்புத்தூா், நீலகிரி மாவட்டங்களிலும், எல்லையான கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூா், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளை மூட உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த வார வெள்ளிக்கிழமை வெளியிட திட்டமிடப்பட்டிருந்த 6 படங்கள் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் ரசிகா்கள் கூட்டம் குறைவாக இருந்தால், பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால் படங்கள் வெளியாகாது எனக் கூறப்படுகிறது.

விஜய் படத்துக்கும் சிக்கல்?: அதே போல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி விஜய்யின் ‘மாஸ்டா்’ படத்தை வெளியிட அனைத்து பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது படக்குழு. ஆனால், கரோனா அச்சத்தால் படத்தை திட்டமிட்டபடி வெளியிடலாமா அல்லது தள்ளி வைக்கலாமா என்ற ஆலோசனை விரைவில் நடைபெறவுள்ளது. ‘மாஸ்டா்’ இசை வெளியீடு விழா முடிந்தவுடன், இந்த ஆலோசனை நடைபெறும் எனத் தெரிகிறது. வெளிநாடுகள் மற்றும் கேரளம், ஆந்திரம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், ‘மாஸ்டா்’ பட வெளியீடு ஒத்திவைக்கப்படும் எனத் தெரிகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT