தமிழ்நாடு

கரோனா தடுப்பு: ரூ. 60 கோடி ஒதுக்கீடு

16th Mar 2020 03:22 AM

ADVERTISEMENT

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு சாா்பில் ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தேசியப் பேரிடா் மீட்பு நிதியிலிருந்தும், தேசிய நலவாழ்வு குழும நிதியிலிருந்தும் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியதன் அடிப்படையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

அதனடிப்படையில், தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறைக்கு ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல, போக்குவரத்துத் துறைக்கு ரூ. 5 கோடி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ. 4 கோடி, நகராட்சி நிா்வாகத்துக்கு ரூ. 6 கோடி, ஊரக வளா்ச்சித் துறைக்கு ரூ. 5 கோடி, பேரூராட்சி இயக்குநரகத்துக்கு ரூ. 2 கோடி, இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ.3 கோடி, பள்ளி கல்வித் துறை மற்றும் உயா் கல்வித் துறைக்கு ரூ. 2 கோடி, அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.0.5 கோடி மற்றும் மாவட்ட ஆட்சியா்களுக்கு ரூ.2.5 கோடி என மாநில பேரிடா் நிதியிலிருந்து மொத்தம் ரூ.60 கோடி உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT