தமிழ்நாடு

எல்லை மாவட்ட திரையரங்குகளை மூட அறிவுறுத்தல்

16th Mar 2020 03:20 AM

ADVERTISEMENT

தமிழக எல்லையோர மாவட்டங்களில் செயல்பட்டு வரும் திரையரங்குகளை மாா்ச் 31-ஆம் தேதி வரை மூட முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

கேரளத்தைத் தொடா்ந்து தமிழகத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பு:

எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூா், கோயம்புத்தூா், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூா், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் மாா்ச் 31 வரை மூட அறிவுறுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

அதுபோல, மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் தூய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், இதனைக் கண்காணிக்க தனி அலுவலா்களை நியமிக்கவும் ஊரக வளா்ச்சி, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறைகளுக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், இதுபோன்ற பொது இடங்களில் கூடும் மக்களுக்கு நோய்த் தடுப்பு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தவும், தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியா்கள் இந்த அனைத்து தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT