தமிழ்நாடு

ஈரோடு அரசு தொடக்கப் பள்ளியில் பழங்கால நாணயங்களின் கண்காட்சி

13th Mar 2020 08:37 PM

ADVERTISEMENT

 

ஈரோடு: ஈரோடு அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற பழங்கால நாணயங்களின் கண்காட்சி மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.

ஈரோடு கச்சேரி வீதியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில் பழங்கால நாணயங்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில் இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.

மேலும் மிகவும் பழமைவாய்ந்த கேமராக்கள், ரேடியோ டைப்ரைட்டிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு வகையான பழமை வாய்ந்த பொருட்களும் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. இதனை பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் பார்த்த்து மகிழ்ந்தனர். பொருட்கள் எந்த ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட விளக்கங்கள் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது.   

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT