தமிழ்நாடு

20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு: அண்ணா பல்கலை

13th Mar 2020 01:24 PM

ADVERTISEMENT


சென்னை: 20 ஆண்டுகளாக இறுதித் தேர்வுகளில் அரியர் வைத்திருப்போருக்கு அண்ணா பல்கலைக்கழகம் இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.

பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த தொடர் கோரிக்கையை ஏற்று, ஏற்கனவே அளிக்கப்பட்ட கால அவகாசங்களைத் தவர விட்டவர்களுக்கு அரியர் வைத்திருக்கும் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற அண்ணா பல்கலைக்கழகம் இறுதி வாய்ப்பினை வழங்கியுள்ளது.

வரும் ஏப்ரல்  /மே 2020 மாதங்களில் நடைபெறும் தேர்வுகளின் போது, கடந்த 20 ஆண்டுகளில் அரியர் வைத்திருப்போர் தேர்வெழுத இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு தேர்வை எழுத அண்ணா பல்கலைக்கழகத்தின் https:coe1annauniv.edu என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

இன்று முதல் மார்ச் 23ம் தேதி வரை சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT