இருமல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளவர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரவேண்டாம் என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இருமல் சளி காய்ச்சல் இருந்தால் வரவேண்டாம் என சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் தகவலை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கோவில் நிர்வாகம் அது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்று கோவில் இணை ஆணையர் நடராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், கோவில் நிர்வாகம் பொதுமக்கள் வசதிக்கு ஏற்ப அனைத்து வகையான ஏற்பாடுகளும் தயார் நிலை வைத்துள்ளதாகவும் பொதுமக்கள் நல்ல முறையில் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எந்த ஒரு அறிவிப்பாக இருந்தாலும் முறைப்படி கோவில் நிர்வாகம் தரப்பில் செய்தி அறிக்கை வெளியிடப்படும் அதுவரை எந்த ஒரு வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கி வருகின்றது.