தமிழ்நாடு

கரோனா வைரஸ் பாதிப்பு: வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் 81 வயது முதியவருக்கு சிகிச்சை

13th Mar 2020 06:38 PM

ADVERTISEMENT

 

வேலூர்: கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் 81 வயது முதியவர் ஒருவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கோவிட் - 19 எனும் கரோனா வைரஸ் தாக்குதல் தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த வகை வைரஸ்க்கு இந்தியாவிலும் இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகவில் முதியவர் ஒருவர் இறந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதைத்தொடர்ந்து, அனைத்து மாநிலங்களிலும் கரோனை வைரஸ் தடுப்பிற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் 81 வயது முதியவர் ஒருவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவப்பரிசோதனையில் அவர் கரோனா வைரஸôல் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் கடும் அச்சத்துக்கு உள்ளானதுடன், இந்த தகவல் வெளியானதை அடுத்து பல்வேறு பகுதிகளிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

எனினும் அந்த முதியவருக்கு ஏற்பட்டிருப்பது உலகை அச்சுறுத்தும் கோவிட் - 19 எனும் வைரஸ் கிடையாது, அவருக்கு இயல்பாக மனிதர்களுக்கு சளி, காய்ச்சலை ஏற்படுத்தக்ககூடிய சாதாரண கரோனா வைரஸ் காய்ச்சல் தான் என்றும், இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் மேலும் கூறுகையில், மனிதர்களுக்கு சாதாரணமாக 229ஈ (ஆல்"ஃ"பா கரோனாவைரஸ்), என்எல்63 (ஆல்"ஃ"பா கரோனாவைரஸ்), ஓசி43 (பீட்டா கரோனாவைரஸ்), ஹெச்கேயு1 (பீட்டா கரோனாவைரஸ்) போன்ற வைரஸ்கள் ஏற்கனவே பரவலாக எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாமல் உள்ளவையாகும். தவிர, எம்ஈஆர்எஸ் - சிஓவி எனும் பீட்டா கரோனா வைரஸ் எம்இஆர்எஸ் என்ற சுவாச நோயையும், எஸ்ஏஆர்எஸ் - சிஓவி எனும் பீட்டா கரோனா வைரஸ் எஸ்ஏஆர்எஸ் எனும் கடுமையான சுவாச நோயையும் ஏற்படுத்தும். தவிர, எஸ்ஏஆர்எஸ் }சிஓவி2 ஆகிய வகை கரோனா வைரஸ்களும் உள்ளன. தற்போது உலகை அச்சுறுத்தக் கூடிய கரோனா 2019 என்பது கோவிட் - 19 எனும் புதிய வகை வைரஸாகும். வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எந்தவொரு நோயாளிக்கும் இந்த கோவிட் - 19 வகை வைரஸ் தாக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT