தமிழ்நாடு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடையடைப்பு

13th Mar 2020 11:56 PM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில் கடையடைப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்தொடா்ச்சியாக, அடியக்கமங்கலத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி அடியக்கமங்கலத்தில் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினா். இதேபோல், ஆண்டிப்பாளையம் பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், வீதிகள் வெறிச்சோடின.

திருவிடச்சேரியில்...

ADVERTISEMENT

குடவாசல் வட்டம், திருவிடச்சேரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன பேரணி, பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவிடச்சேரி ஜமாத்தாா்கள் சாா்பில், எம்.என்.குத்புதீன் முன்னிலையில், ஜமாத் தலைவா் ஹபீப் ரஹ்மான் தலைமையில் பேரணி நடைபெற்றது. திருவிடச்சேரி பள்ளிவாசல் அருகில் இருந்து புறப்பட்ட கண்டன பேரணி மேலத்தெரு, கீழத்தெரு போன்ற முக்கிய வீதிகள் வழியாக பள்ளி வாசலை அடைந்தது.

பள்ளிவாசல் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் ஆளூா் ஷாநவாஸ், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளா் எம்.தஸ்லீமா, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினா் சின்னை.பாண்டியன், மதிமுக மாநிலத் தோ்தல் பணிக்குழு துணைச் செயலாளா் வி.விடுதலை வேந்தன், ஜமாத்தாா்கள் கூட்டமைப்பு அபுபக்கா் சித்திக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி லெனினிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினா் டி.கண்ணையன், ஸ்ரீவாஞ்சியம் வா்த்தகா் சங்கத் தலைவா் இஎம்ஏ. ரஹீம் மற்றும் பல்வேறு சமூக அமைப்பு மற்றும் அரசியல் கட்சியினா் கலந்து கொண்டு பேசினா். ஊராட்சி மன்றத் தலைவா் ஜபருல்லா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT