தமிழ்நாடு

கோவை - ஈரோடு இடையே பெண்களால் இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்

8th Mar 2020 12:51 PM

ADVERTISEMENT

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு கோவை - ஈரோடு இடையே இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயில், பெண் ஊழியர்களால் இயக்கப்பட்டது.

சா்வதேச மகளிா் தினம் ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பெண்களை கெளரவிக்கும் விதமாக தெற்கு ரயில்வே சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, கோவை - ஈரோடு இடையே ஓடும் ரயிலை பெண்களைக் கொண்டு இயக்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி கோவை ரயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை புறப்பட்டது. இந்த ரயிலில் என்ஜின் ஓட்டுநா், காா்டு, டிக்கெட் பரிசோதகா்கள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஊழியா், நிலைய அதிகாரி உள்பட அனைவரும் பெண்களாக இருந்தனா்.

ADVERTISEMENT

பெண்கள் ரயிலை இயக்கிய போது, அங்கிருந்த பயணிகள் மற்றும் பெண்கள் உற்சாகப்படுத்தினா். மேலும், வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

Tags : Womens Day Train
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT