தமிழ்நாடு

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

8th Mar 2020 08:11 AM

ADVERTISEMENT

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 20 காசுகள் மற்றும் டீசல் விலை 20 காசுகள் குறைந்துள்ளது. 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப, எண்ணெய் நிறுவனங்கள் டீசல் மற்றும் பெட்ரோல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் நேற்றை விட, பெட்ரோல் விலை இன்று குறைந்துள்ளது. 

நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 73 ரூபாய் 78 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 20 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் 73 ரூபாய் 58 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோல், நேற்று ஒரு லிட்டர் டீசல் 67 ரூபாய் 21 காசுகளுக்கு விற்பனையான நிலையில், இன்று 20 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் 67 ரூபாய் 01 காசுகளுக்கு விற்பனையாகிறது.

ADVERTISEMENT

Tags : petrol diesel
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT