தமிழ்நாடு

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கரோனா அறிகுறி

8th Mar 2020 08:01 AM

ADVERTISEMENT

அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இதுவரை 34 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக தமிழகத்தைச் சோ்ந்த ஆண் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது. இதனால் அவர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சைக்கான தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சிறுவனை விமான நிலைய மருத்துவக்குழுவினர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

ADVERTISEMENT


 

Tags : Corona
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT