தமிழ்நாடு

தினசரி சவால்களை தகர்த்தெறியும் வீரப்பெண்மணிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்: கமல்ஹாசன்

8th Mar 2020 10:48 AM

ADVERTISEMENT

தினசரி சவால்களை தகர்த்தெறியும் வீரப்பெண்மணிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் தெரிவித்துள்ளார். 

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், பெண்களுக்கு பாதுகாப்பும், சம உரிமையும் என்ற முழக்கத்தோடு பெண்களுக்கு பாரபட்சமின்றி வாய்ப்புக்களும், ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்கவும் கற்று கொடுத்தாலே சம நீதி, சம உரிமை என்பது சாத்தியப்படும்.

தினசரி இந்த சவால்களை தகர்த்தெறிகின்ற வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள்.

Tags : International Womens Day
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT