தமிழ்நாடு

பெண் சிசுக்கொலைகள், கல்வி மறுப்பு, பாலியல் கொடுமை உள்ளிட்ட அனைத்தையும் ஒழித்து விடுதலை காண்போம்: கனிமொழி

8th Mar 2020 01:55 PM

ADVERTISEMENT

பெண் சிசுக்கொலைகள், கல்வி மறுப்பு, பாலியல் கொடுமை உள்ளிட்ட அனைத்தையும் ஒழித்து விடுதலை காண்போம் என்று திமுக எம்பி கனிமொழி தனது மகளிர் தின வாழ்த்து கூறியுள்ளார். 

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகெங்கிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து திமுக எம்பி கனிமொரி தனது டிவிட்டரில், பெண் சிசுக்கொலைகள், குழந்தைகள் மீதான வன்முறை, கல்வி மறுப்பு, உரிமை மறுப்பு, குடும்ப வன்முறை, பாலியல் கொடுமை இவை அனைத்தும் ஒழித்து விடுதலை காண்போம்.

தாயாய் மனைவியாய் சகோதரியாய் மகளாய் மட்டுமே பெண்ணைப் பார்க்காமல், பெண் என்பவள் சக மனுஷி, கனவுகள் லட்சியங்களோடு அறிவும் திறனும் பெற்ற சமமானவள் என்று உலகம் உணரட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.    

ADVERTISEMENT

Tags : kanimozhi DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT