தமிழ்நாடு

அமைச்சர் நிகழ்ச்சியில் அரசு கட்டடம் இடிந்து விழுந்தது: நூலிழையில் தப்பிய அமைச்சர்

8th Mar 2020 01:40 PM

ADVERTISEMENT

அமைச்சர் நிகழ்ச்சியில் அரசு கட்டடம் இடிந்து விழுந்ததில் அமைச்சர் நூலிழையில் தப்பினார். 

மதுரை செல்லூர் ரவுண்டானா பகுதியில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டிருந்த ரவுண்டானா கட்டிடத்திறப்பு விழாவில் கபடி வீரர்களை நினைவுபோற்றும் கபடி சின்ன சிலை நிறுவுவது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் 40லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த ரவுண்டானா கட்டிடத்தில் மேல் நின்று மக்கள் முன்பாக பேசியபோது திடிரென கட்டடம் மேல் இருந்த டைல்ஸ்கள் அனைத்தும் உடைத்து மிகப்பெரிய பள்ளம் உருவானது. 

இதனால் பேசிக்கொண்டிருந்த அமைச்சர் பதற்றமடைந்து நிலையில் நூலிழையில் உயிர்தப்பினார். இதனையடுத்து அவசரவசரமாக காவல்துறையினர் மற்றும் தொண்டர்கள் மீட்டு அழைத்துசென்றனர். இதனையடுத்து நிகழ்ச்சியை பாதியிலயே ரத்து செய்துவிட்டு அமைச்சர் புறப்பட்டு சென்றார். அரசு நிதியில் கட்டப்பட்ட கட்டடம் ஆய்வின்போதே இடிந்துவிழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அரசு பணியில் ஊழல் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 

ADVERTISEMENT

Tags : madurai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT