தமிழ்நாடு

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த காளை பலி

8th Mar 2020 12:31 PM

ADVERTISEMENT

ஆவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வந்த காளை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவூரில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் திடல் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த காளை ஒன்று மின்சாரம் தாக்கி இறந்தது. இதைகண்ட கிராம மக்கள் இறந்த காளையைச் சுற்றி கதறி அழுதனர். இச்சம்பவம் காண்போரை கண்கலங்கச் செய்தது. 

மூன்று நாட்களாக அறுந்து கிடந்த மின்கம்பியை சரி செய்யக்கோரி ஏற்கென புகார் கொடுத்தும் மின்வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட மின்வாரியத்தினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 
 

Tags : bull
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT